விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு! என்ற நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத் தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொண்டு நம்மால் இயன்ற நிதியுதவி வழங்கி தமிழ் செம்படைக் கழகம் கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்போம்!
பேரறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதாரத் துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்; பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவற்றுக்கான உரிய இடத்தைப் பெற்றுத் தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும் – ஒன்றிய கூட்டாட்சியும் உருவாகிடவும் தொண்டாற்றுவது தான் தமிழ் செம்படைக் கழகத்தின் கோட்பாடு.